இயக்குனர் செல்வராகவன் தற்போது ஜிவி பிரகாஷை வைத்து 'மென்டல் மனதில்' என்ற படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக நடிக்கும் ஜிவி பிரகாஷே இப்படத்திற்கு இசையும் அமைக்கிறார். பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம் படத்தில் நடித்திருந்த மாதுரி ஜெயின் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.