நான் இருக்கின்றபோதே தென்பெண்ணை - பாலாற்றை இணைக்க வேண்டும் என்பது எனது ஆசை என அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசியுள்ளார். திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உரையாற்றிய துரைமுருகன், சாத்தனூர் அணை நிரம்பிய பின் வீணாகப்போகும் தண்ணீரை திருப்பி பாலாற்றில் விட்டால் பாலாற்றில் தண்ணீர் போகும். எனக்கு தென்பெண்ணை - பாலாற்றை இணைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் இருக்கும் போதே அந்த திட்டத்தை நிறைவேற்றினால் எனது பெயர் இருக்கும்” என்று கூறியுள்ளார்.