ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அதிக குழந்தைகளைப் பெறுவதற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதனையடுத்து, விஜயநகரத்தைச் சேர்ந்த அக்கட்சியின் எம்.பி. காளிசெட்டி அப்பலா நாயுடு, மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு தலா ரூ.50,000 வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், ஆண் குழந்தை பெற்றெடுத்தால், அந்தப் பெண்ணுக்கு ஒரு பசுவும் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.