மும்பை போரிவலி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண் ஒருவர் இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் உள்ள பாதையில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த ரயில்வே காவலர் அதிர்ச்சி ரயில்வே காவலர், உடனே அவரை பிடித்து இழுத்துள்ளார். சரியான நேரத்தில் அந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.