13 நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தப் போகும் இளையராஜா

63பார்த்தது
லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவிற்கு தமிழக அரசும், ரசிகர்களும் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தனக்கு 81 வயதாகிவிட்டது, இனி இவர் என்ன செய்யப் போகிறார் என நினைக்காதீர்கள். இனிதான் ஆரம்பமே. தற்போது 13 நாடுகளில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளேன் அக்டோபர் 6 துபாய், செப்டம்பர் 6 பாரிஸ் என வரிசையாக நிகழ்ச்சிகள் நடத்த உள்ளேன்” என தெரிவித்தார். 

நன்றி: News18

தொடர்புடைய செய்தி