தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீடு அட்டை இல்லை என்றாலும் ஒருநபர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை வழங்குவதில் காலதாமதம் செய்யக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே ஆதரவற்றவர்களாக இருக்கும் அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும்போது எந்தவிதமான காலதாமதத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.