கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கான நல வாரியக் கட்டிட அலுவலகத்தை திறந்து வைத்து அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றினார். இதன் போது அவர் பேச்சில் சிறிது தடுமாற்றம் இருந்தது. பத்திரிக்கை என்ற வார்த்தைக்கு பதிலாக பத்திரம் என கூறினார். அதே போல வேணுகோபால் என்ற பெயரை குறிப்பிடுவதற்கு பதிலாக வேணுகாணம் என சொன்னார். பின்னர் சட்டென திருத்தி பேசினார். மீண்டும் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என கூறினார்