அமெரிக்காவில், 2018-2022 காலங்களில் 12 பெண்களை கடத்திய டாக்ஸி ஓட்டுநர் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த வழக்கில் டாக்ஸி ஓட்டுநருக்கு 290 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் டாக்ஸி ஓட்டுநர் ஜான் (43) என்பவர், போதையிலிருந்த பெண்களை குறிவைத்து, டாக்ஸி மூலம் அவர்களை ஏற்றிச் சென்று, பாலாத்காரம் செய்துள்ளார். பார்கள், கிளப்புகளுக்கு வெளியே இருக்கும் பெண்களை குறிவைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.