இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 'வேலியண்ட்' என்ற தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றினார். நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த இசையை யாரும் டவுன்லோட் செய்து கேட்க வேண்டாம், என்னை தவறாக நினைக்காதீர்கள். என் மக்கள் இதை நேரடியாக கேட்க வேண்டும். அந்த அனுபவம் வேறு மாதிரி இருக்கும். அதை அனைவரும் அனுபவிக்க வேண்டும்" என்றார்.