திண்டுக்கல் மாவட்டம் தேமுதிக சார்பில் கட்சி கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் மேடையில் உட்கார்ந்திருந்த போது விஜயகாந்த் பேசிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது. மறைந்த தனது கணவரின் குரலை கேட்ட பிரேமலதா மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.