சாம்பியன் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. கோப்பையை இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பெற்றுக்கொண்டார். கோப்பை வென்றதை அடுத்து இந்திய அணி வீரர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் எழுப்பினர். துபாய் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் வெற்றியை அடுத்து தமிழகத்திலும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.