கேரளா: ஷினி என்ற பெண் தனது 2 மகள்களுடன் சில நாட்களுக்கு முன்னர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸ் விசாரிக்கும் நிலையில் ஷினி கடைசியாக பேசிய தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது. அதில், ஏன் வாங்கிய கடனை கட்டவில்லை என கேட்க, அதற்கு ஷினி, "என் கணவர் என் பெயரில் கடன் வாங்கியிருக்கிறார். எங்களின் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. முடிவுக்கு பின்னரே பணம் கிடைக்கும்" என பேசினார்.