சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய அணி 3வது முறையாக வென்று அசத்தியுள்ளது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் கொண்டாட்டம் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இறுதியாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஸ்டெம்புடன் கோலி மற்றும் ரோகித் குழந்தைகளை போல் விளையாடினர்.