இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி சென்னை மெரினாவில் ஒளிபரப்பப்பட்டது, இதில் இந்திய அணி கோப்பை வென்ற நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தோனி, கோலிக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் அவர்களின் பெயர்களை சொல்லி கோஷம் போட்டனர். இந்திய தேசியக் கொடியை அசைத்து ரசிகர்கள் உற்சாகமாக இருந்த வேளையில் ஒருவர் தவெக கொடியை காட்டினார்.