64 மி. மீ. , மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

63பார்த்தது
ராமநாதபுரத்தில் காலை வரை 64மி. மீ. , மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பருவ மழையை நம்பி விவசாயிகள் நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தில் அதிகபட்சமாக 64 மி. மீ. , மழை பெய்துள்ளது
அதற்கு அடுத்தபடியாக கடலாடியில் 40 மி. மீ. , தொண்டியில் 29. 60, ஆர். எஸ். மங்கலம் 16, தங்கச்சிமடம் 14, முதுகுளத்துார் 13. 20, பரமக்குடி 11. 40, மண்டபம் 11, கமுதி 8. 20, பாம்பன் 3. 60, ராமேஸ்வரம் 2 மி. மீ. , என மழை பொழிவு இருந்தது.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பருவ காலம் முறையாக கை கொடுத்தால் மட்டுமே நெற்பயிர்கள் விளைந்து பயன் கொடுக்கும். நிலத்தடி நீர் மேம்படவும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி