சிவகங்கை: பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சமேத ஶ்ரீ சசிவர்னேஸ்வரர் திருக்கோயிலில் பைரவர் ஜெயந்தி திருநாளான கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி தினமான இன்று (நவம்பர் 24) சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. பைரவர் சுவாமிக்கு திரவிய பொடி, மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பழங்கள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருள்கள் கொண்டு சிறப்பாகஅபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்மாலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து கோபுர தீபம் கும்ப தீபம் நாக தீபம் மற்றும் ஷோடச உபசாரங்கள் நடைப்பெற்றது. பின்னர் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து ஏழு முக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பைரவர் சுவாமியை வழிபட்டனர்.