கோயில் பூசாரி போக்சோ வழக்கில் கைது.

80பார்த்தது
சிவகங்கை அருகே சோழபுரத்தில் உள்ள கோயிலில் கடந்த 15 ஆண்டுகளாக பூசாரியாக பெரியசாமி என்ற 70 வயது முதியவர் பணியாற்றி வருகிறார். இவர் கோயிலில் யாரும் இல்லாத நேரங்களில் அப்பகுதி சிறுவர், சிறுமிகளை சன்னதியை சுத்தப்படுத்துவதற்காக தனியாக அழைத்து அவர்கள் உள்ளே சென்றவுடன் கதவை பூட்டிக் கொண்டு சன்னதிக்குள் பாலியல் வன்புணர்வு ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் சிவகங்கை நல அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். விரைந்து வந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் உண்மை என தெரிய வரவே இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்்த புகாரின் அடிப்படையில் பூசாரி பெரியசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 10 சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அனைவரும் புனிதமாக கருதப்படும் கோயில் சன்னதிக்குள் வைத்து சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் இன்று மதியம் சுமார் 3 மணி வரைபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி