சிவகங்கை - Sivaganga

சிவகங்கை: உடற்பயிற்சியினை வலியுறுத்தி, விழிப்புணர்வு நடை பயணம்

தமிழக அரசின் முதல்வரின் கனவு திட்டமான, நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டதின் படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சுகாதாரத்துறை, சிவகங்கை லயன்ஸ் கிளப், நடைப்பயிற்சியாளர்கள் இணைந்து கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் வளாகத்தை சுற்றி சுமார் 8 கிலோமீட்டர் தூரம் 10, 000 அடி நடந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள், மற்றும் சிறுவர் சிறுமியர் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

வீடியோஸ்


சிவகங்கை
சிவகங்கை: ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறி - 4 பேர் மீது வழக்கு
Oct 06, 2024, 17:10 IST/திருப்பத்தூர்
திருப்பத்தூர்

சிவகங்கை: ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறி - 4 பேர் மீது வழக்கு

Oct 06, 2024, 17:10 IST
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மேல குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வந்த நிலையில் இவர் தனது ஆட்டோவை கூத்தாடி அம்மன் கோவில் பகுதியில் ஓட்டி சென்றுள்ளார். அப்பொழுது இவர் ஆட்டோவை வழிமறித்த மதுரை மாவட்டம் சொக்கலிங்கம் புரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கக்கன் ஜி நகர் பகுதியைச் சேர்ந்த சோலைமலை (வயது 23), வடக்கு வேளாண் தெரு பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 18), மற்றும் கக்கஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ற காட்டுப்பூச்சி ஆகிய நான்கு பேரும் முருகனிடம் 200 ரூபாய் வழிப்பறி செய்ததாக சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.