இடையமேலூர் துணை மின்நிலையப் பகுதியில் நவ. 22ம் தேதி மின்தடை

81பார்த்தது
சிவகங்கை அருகே இடையமேலூர் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் நவ. 22ம் தேதி வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவகங்கை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ஏ. கே. முருகையன் வெளியிட்ட தகவல்:
சிவகங்கை மின் பகிர்மான வட்டம், இடையமேலூர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பகுதிகளுக்கு நெடுச்சாலைத்துறை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின் விநியோகம் நடைபெறும் கூட்டுறவுப்பட்டி, கன்னிமார்பட்டி, ஒக்குபட்டி, மலம்பட்டி, தேவன்கோட்டை, சாலூர், மேலப்பூங்குடி, பாப்பாகுடி, வில்லிபட்டி ஆகிய பகுதிகளில் 22. 11. 2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் இன்று மாலை சுமார் ஐந்து மணி அளவில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி