சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களிலும் வானவில் மன்ற போட்டிகள் நடைபெற்று முதல் மூன்று இடத்தை பெற்ற 36 பள்ளிகளின் 108 மாணவ மாணவிகள் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் போட்டியில் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான வானவில் மன்ற அறிவியல் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கும் போட்டியானது மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை கூட்டரங்கில் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் இன்று மாலை சுமார் 5 மணி வரை நடைபெற்றது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ முன்னிலை வகித்தார். வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோ வரவேற்றார். அப்சா கல்லூரியின் மேனாள் துணை முதல்வர் முனைவர் கோபிநாத் காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளர் சேவற்கொடியோன் சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் கணிதத் துறைத் தலைவர் முனைவர் கண்ணன் ஆகியோர் நடுவர்களாக சிறப்பாக செயல்பட்டு மாணவர்களின் படைப்பாற்றல் திறனையும் ஆய்வக சிந்தனையையும் கருத்தாய்வு செய்து மாணவர்களின் ஆய்வு கட்டுரைகளை மதிப்பாய்வு செய்தார்கள்.