பல்வேறு கோரிகைகளை வலியுறுத்தி சென்னை நோக்கி டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள பேரணி குறித்து சிஐடியு தொழில்சங்கம் சார்பில் சிவகங்கை ஆட்சியரகப் பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகத்தில் வாயில் கூட்டம் இன்று மாலை சுமார் 5. 30 மணிவரை நடைபெற்றதுஇந்த கூட்டத்தில்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்க(சிஐடியு) சிவகங்கை மண்டலம் சார்பில், மாநிலம் தழுவிய கோட்டை நோக்கி பேரணி கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் மண்டலத் தலைவர் திருவளர்செல்வம் தலைமை வகித்தார்.
கோரிக்கைகள்: காலிப்பணி இடங்களில் 2012 முதல் 2016 வரை உள்ள பருவகால பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதல் பணியில் தனியார் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஈடுபடுத்தப்படுவதை ரத்து செய்ய வேண்டும். பருவகால பணியாளர்கள் பணி முப்பு பட்டியல் வெளியிட வேண்டும். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள பஞ்சப்படி தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
பருவகால பணியாளர்கள் தேர்வில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும். உள்ளிட்ட மண்டல அளவிலான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாவட்டச் செயலர் சேதுராமன் தொடக்கி வைத்து பேசினார்.