சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கருமந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த தனது கணவர் கருப்பையா(32). கடந்த 2022 -ல் துபை நாட்டுக்கு கட்டட வேலைக்காகச் சென்றார். அங்கிருந்து மாதம்தோறும் எனக்கு பணம் அனுப்பி வந்தார். வாரம் ஒரு முறை போனில் பேசிவந்தார்.
கடந்த 3 வாரங்களாக என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரியாமல் நானும் எனது இரண்டு பெண் குழந்தைகளும் தவித்து வந்தோம். இந்நிலையில் எனது கணவர் கருப்பையாவை துபை போலீஸார் அழைத்துச் சென்றதாக அவருடன் பணியாற்றும் நண்பர் என்னிடம் போனில் கடந்த 10 நாட்களுக்கு முன் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து, கடந்த வாரம் திங்கள்கிழமை சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் எனது கணவரை மீட்டுத்தரக் கோரி மனு அளித்தேன். எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், இந்த வாரமும் ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தேன். மாவட்ட ஆட்சியரும், தமிழக முதலமைச்சரும் துபையில் காணாமல் போன எனது கணவரை மீட்க துரித நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டுமென ஆட்சியரகத்தில் ஆட்சியர் ஆஷா அஜித்திடம் இன்று மனு அளித்துள்ளார்.