சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அஇஅதிமுக சார்பில் ஒன்றிய கழகம் நகர் கழகம் பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டம் ஆட்சியரகப் பகுதியில் இன்று மாலை சுமார் 4 மணி வரை மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய செந்தில் நாதன் எம் எல் ஏ மாவட்டம் முழுவதும் கட்சி வளர்ச்சி பணிகள் நடைபெறுவது குறித்த கூட்டங்கள் நடத்துவது பற்றிய ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றியதை கழக பொதுச்செயலாளரே நம்மை அழைத்து பாராட்டி யுள்ளது நமது மாவட்ட நிர்வாகிகளுக்கு கிடைத்த பெருமை. இதேபோல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக அரசு அமைவதற்கு நமது நிர்வாகிகள் கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.