சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் அமைந்துள்ள அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு, இன்று (அக்.,2) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் மருது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அதே பகுதியில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை நகரச் செயலாளர் எம் எப் சகாயம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றிய செயலாளர் சின்ன கருப்பு இளைஞர் மன்ற நகர செயலாளர் முத்துக்குமார் நகர்குழு உறுப்பினர்கள் அமிர்தசாமி குஞ்சரம் காசிநாதன். ஆட்டோ சங்க நகரச் செயலாளர் பாண்டி ஆட்டோ சங்க நிர்வாகிகள் அருண் தொழிற்சங்க நிர்வாகிகள் காளை உடையார் மாலா சங்க தொழிற்சங்கநிர்வாகிகள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.