பாஜகவினர் சார்பில் மாட்டு வண்டி பந்தயம்

76பார்த்தது
சிவகங்கை போக்குவரத்து கழக பணிமனை முன்புஉள்ள தொண்டி சாலையில் பாஜகவினர் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாட்டிற்கு 8 கிலோமீட்டர் தொலைவும் சிறிய மாட்டிற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவும் பந்தய எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டு பெரியமாடு, சிறியமாடு என இருபிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 68 ஜோடி மாடுகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. முதல் 4 இடங்களை பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

இந்த போட்டியினை, சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த
ஏராளமானரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக என்று மதியம் சுமார் இரண்டு மணி வரை கண்டு களித்தனர்.

தொடர்புடைய செய்தி