சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனத்தில் ஆதிதிராவிட சமுதாய மக்கள் புறக்கணிக்கப்பட்டதாக கோயில் ஆதிதிராவிடர் மண்டகப்படி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (அக்.,3) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் காலம் காலமாக நியமிக்கப்பட்டு வந்த அறங்காவலர்கள் 5 நபர்களை இந்த ஆண்டும் எவ்வித மாறுதலும் இன்றி உடனே நியமனம் செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி அறங்காவலர் குழுவில் பட்டியலின உறுப்பினரை உடனே நியமிக்க வேண்டும். அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனத்தில் பட்டியல் இன மக்களை புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.