சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்கள் தலைமையில் நடைபெற்றதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 356 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத்திட்டத்தின் கீழ் பயனடைந்த 06 பயனாளிகளுக்கு நினைவுப் பரிசுகளும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை, தேவகோட்டை அரசு தலைமை மருத்துவமனை, காரைக்குடி ஜெடையாஸ்டீவ் மருத்துவமனை மற்றும் தேவகோட்டை செந்தில் மருத்துவமனை ஆகிய 05 மருத்துவமனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷாஅஜித், வழங்கினார்.