அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்

62பார்த்தது
மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் திட்ட அலுவலர் கண்டித்து அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பகுதியில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாநில மையம் முடிவின்படி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலகம் முன்பாக நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் ஜெயமங்களம், மாவட்ட செயலாளர் பாக்கியமேரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கோரிக்கைகள்: அரசு ஆணைப்படி, ஒவ்வெரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் 5 ஆண்டுகள் பணி தகுதி முடித்த மினி மைய அங்கன்வாடி ஊழியர்களுக்கு பிரதான மையங்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2023 -இல் வழங்க வேண்டிய பதவி உயர்வை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வரும் மாவட்ட திட்ட அலுவலர் மாரியப்பன் உள்பட காரணமாக உள்ள அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பதவி உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி இந்த உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில், சிஐடியு மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி