முதுகுளத்தூர் - Mudukulathur

ராமநாதபுரம்: தேவர் குருபூஜை; அமைச்சர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு வரும் 30-ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா 62 ஆவது குருபூஜை விழா நடைபெற உள்ளது. முத்துராமலிங்க தேவர் நினைவிடம் முன்பு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வெயில் மற்றும் மழையில் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்த 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் காத்திருக்கும் அறை கட்டப்பட்டு வருகிறது. அதனை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வா. வேலு மற்றும் பால்வளத்துறை மற்றும் கதர் வாரிய துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேவர் நினைவிடத்திலும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வா. வேலு; முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் பொதுமக்கள் காத்திருப்பு கூடம் முதல்வர் ஆணையின்படி கட்டப்பட்டு வருகிறது வரும் 30ஆம் தேதிக்குள் அதன் பணிகளை முடிக்க ஆணையிட்டு உள்ளோம் எனக் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்

வீடியோஸ்


இராமநாதபுரம்
Oct 11, 2024, 05:10 IST/இராமநாதபுரம்
இராமநாதபுரம்

15 படகுகளுக்கு நிவாரணம் நிறுத்தம்

Oct 11, 2024, 05:10 IST
இலங்கையில் சேதமடைந்த 15 படகுகளுக்கு இழப்பீடு நிறுத்தப்பட்டதற்கு மீனவ சங்கத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தாா். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ. 5 லட்சம் தமிழக அரவு சாா்பில் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகையை முதல்வா் மு. க. ஸ்டாலின் ரூ. 6 லட்சமாக உயா்த்தினாா். இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, சேதமடைந்த 58 படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று முதல்வா் மு. க. ஸ்டாலின் 58 படகுகளுக்கும் நிவாரணத் தொகை தலா ரூ. 6 லட்சம் வழங்க உத்தரவிட்டிருந்தாா். ஆனால், மீன்வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் உரிய ஆவணங்களைப் பெறுவதில் அலட்சியம் காட்டியதால் 43 படகுகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. 15 படகுகளுக்கு நிவாரணம் விடுபட்டிருக்கிறது. இது கண்டனத்துக்குரியது. இதை முதல்வா் கவனத்தில் கொண்டு, விடுபட்டுப்போன 15 படகுகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்