வேட்டையன் பட இயக்குநர் மீது போலீசில் புகார்

72பார்த்தது
வேட்டையன் பட இயக்குநர் மீது போலீசில் புகார்
ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில், “கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியரை படம் பிடித்து, தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் சர்ச்சை” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அந்த ஊரில் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியை சித்தரிப்பதாக கூறி, ‘அதனை நீக்க வேண்டும், இயக்குநர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என் சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி