சிவகங்கை: மனமகிழ் மன்றத்தால் போக்குவரத்து பாதிப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேருந்து நிலையத்தில் அருகே மானாமதுரை டூ மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் மனம் மகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபான கடை நடத்தி வருகிறார்கள் இந்த கடையை சுற்றி பள்ளிகள், பேருந்து நிலையம், மருத்துவமனைகள் உட்பட 2000க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர் , இந்த மதுபான கடை அரசு விதித்துள்ள எந்த ஒரு விதிமுறையும் பின்பற்றுவதில்லையாம் இந்த மன மகிழ் மன்றத்தில் உறுப்பினர்கள் மட்டுமே இங்கு வந்து மது அருந்திவிட்டு செல்ல வேண்டும் ஆனால் இங்கு அப்படி ஏதும் நடக்கவில்லை யார் வேண்டுமானாலும் வந்து இங்கு மது அருந்திவிட்டு செல்கின்றனர், மேலும் பார்கிங் வசதி இல்லாத காரணத்தினால் குடிக்க வரும் குடிமகன்கள் தங்களது கார்கள் பைக்குகள் அனைத்தையும் நெடுஞ்சாலையில் நிறுத்தி விடுகின்றனர், இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகள் இந்த சாலையில் வருவதில்லை மற்றொருபுறம் செல்லும் சாலையே வருவதற்கும் போவதற்கும் மக்கள் பயன்படுத்துவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டுள்ளது. பெண்களும் குழந்தைகளும் முகம் சுழிக்கும் வகையில் குடிமகன்கள் அடிக்கடி நடந்து கொள்கின்றார்கள், நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் இந்த தனியார் மனமகிழ் மன்றம் மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சமூக அலுவலர்கள் இன்று மாலை சுமார் ஆறு மணியளவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.