பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா இராமநாதபுரம் 30 தேதி அனுசரிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்ட அரசு சார்பிலும், அரசியல் பிரமுகர்களும், முக்கிய பிரமுகர்களும் மற்றும் சமுதாய மக்களும் அஞ்சலி செல்லுத்த தமிழகம் முழுவதும் இருந்து வருகை தரவுள்ளனர். இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அருங்காட்சியத்திற்கு வரும் அக்டோபர் 30 ம் தேதி அன்று விடுமுறை அளித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் உத்தரவிட்டுள்ளார்.