சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது பீசர்பட்டிணம் கிராமம். கால் பிரிவு ஊராட்சிக்குட்பட்ட இக்கிராமம் மதுரை -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களது பயன்பாட்டிற்கு கடந்த 2015-16 ம் ஆண்டில் ரூ. 17 லட்சம் செலவில் புதிய இ சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டடு, மின் இணைப்பும் கொடுக்கப்பட்டது.
ஆனால் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் திறக்கப்படாமல் புதர் மண்டி பல பகுதிகள் தரை தளம் உட்பட பல பகுதிகள் சேதமடைந்துள்ளது. மக்கள் வரிப்பணத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட புதிய கட்டிடம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி கிராம மக்கள் 9 ஆண்டுகளாக வெளியூருக்கு சென்று இ சேவை மையத்தில் பதிவு செய்து வருகின்றனர். எனவே அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகள் இந்த இ சேவை மைய கட்டிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.