சிவகங்கை அடுத்த காஞ்சிரங்கால் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மின் தடை ஏற்பட்டுக் கொண்டே இருந்துள்ளது. இது குறித்த தொடர்ச்சியாக பொது மக்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் புகார் கூறியதால் ஆத்திரமடைந்த மின்சாரவாரிய போர்மேன் ராமமூர்த்தி என்பவர் புகார் அளித்தவர்களை தொலைப்பேசி வாயிலாக அழைத்து மிரட்டியுள்ளார். இது சம்பந்தமாக மின்சாரவாரிய உதவி பொறியாளர் ஜிமிக்கி ராணியிடம் புகார் தெரிவித்தனர். சமாதானம் செய்வதாக கூறி அவரும் புகார் அளித்தவர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்ததுடன் உதவி பொறியாளர் ஜிமிக்கிராணி மற்றும் அங்குள்ள ஊழியர்கள் கூட்டமாக சேர்ந்து மிரட்டியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மின்தடை ஏற்படுவது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் கூறியவர்களை அலுவலகத்திற்கு அழைத்து உதவி பொறியாளர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.