பள்ளி மாணவர்களிடம் வருவாய் துறையினர் சோதனை

85பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி பள்ளி உள்ளது இங்கு பயிலும் மாணவர்களிடையே பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகின்றது இதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பேரில் மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமையில் வருவாய் துறையினர் பள்ளிக்கு வந்த மாணவர்களிடம் அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனையிட்டனர் செல்போன் மற்றும் போதைப் பொருட்கள் இருக்கிறதா? என்றும் இதே போல் தலைமுடியை சரியாக வெட்டாத மாணவர்களை பெற்றோர்களை வரவழைத்து அவர்களை அனுப்பிவிட்டு தலை முடியை சரியாக வெட்ட சொல்லி அறிவுறுத்தியும் சில மாணவர்களிடம் தாசில்தார் கிருஷ்ணகுமார் சொந்த பணத்தை கொடுத்து தலைமுடியை சரி செய்து வர அனுப்பி வைத்துள்ளார் கையில் பல்வேறு நிறத்தில் கயிறு கட்டி இருந்தால் அங்கேயே கயிறுகளை வெட்டி விட்டுள்ளனர் வருவாய்த் துறையினர் பள்ளியின் வெளியே நின்று கொண்டு மாணவர்களை இன்று காலை சுமார் ஒன்பது முப்பது மணி வரை சோதனை மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி