சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் ஶ்ரீஅபிராமி அம்பாள் சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக மூலவர் அமிர்தகடேஸ்வர சுவாமிக்கும் அம்பாளுக்கும் தைலக்காப்பு சாற்றி திருமஞ்சன பொடி மஞ்சள் பால் பஞ்சாமிர்தம் தேன் நெய் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமணத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து வண்ண மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்று பல்வேறு தீப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வில்வத்தால் அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அமிர்தகடேஸ்வர சுவாமி அபிராமி அம்பாளை வழிபாடு செய்தனர்.