சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் வரும் 27. 10. 2024ம் தேதி 223வது மருதுசகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள், முன் அனுமதி பெற்று சொந்த நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் மூலமாக மட்டுமே அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் சென்று வர வேண்டும். அனுமதி மறுக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக எக்காரணம் கொண்டும் செல்லக்கூடாது. மேலும் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடித்து, அஞ்சலி செலுத்தி வர வேண்டும். மேலும் இருசக்கர வாகனங்களில் சென்று எக்காரணம் கொண்டும் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை மாவட்டக் காவல் துறை சார்பில் இன்று மாலை சுமார் 6 மணியளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.