
கீழடியில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத் துறை அமைச்சர்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கீழடி - அருங்காட்சியகத்தினை நேரில் பார்வையிட்டு, சுற்றுலாத்துறையின் சார்பாக மேம்படுத்த வேண்டிய பல்வேறு வசதிகள் குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி , தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன், தொல்லியல் துறை இணை இயக்குநர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.