மாணவர்களுக்கு ஆட்சியரகத்தில் பாராட்டு விழா

74பார்த்தது
2023-24 ஆம் கல்வியாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளி மற்றும் அரசு பள்ளிகளில் பயின்று நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு பாராட்டு விழாவானது, இன்று மாலை சுமார் 6 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசுகையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

பள்ளிக் கல்வியில் மாணாக்கர்கள் தங்களது திறன்களுக்கேற்ப பயின்று, தற்போது நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை பெற்றுள்ளீர்கள். குறிப்பாக தங்களை சார்ந்தவர்கள் மற்றும் எதிர்கால தலைமுறைகள் ஆகியோர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் வகையிலும் சிறந்து விளங்கி உள்ளீர்கள். அதற்கு அடிப்படையாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நான் முதல்வன் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி திட்டங்கள் உறுதுணையாக அமைந்துள்ளது சிறப்புக்குரியதாகும். என்றார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி