மானமதுரை - Manamadurai

சிவகங்கை: ஸ்டேஷன் மாஸ்டர்களுடன் பாதுகாப்பு உரையாடல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் ஆகியோருடன் ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்கு மதுரை கோட்ட மேலாளர் ஸ்ரீ வத்ஸ்வா பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்தில் பங்கேற்றார். ரயில்வே பிரிவில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள், அலுவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பாதுகாப்பு குறித்து விளக்கம் மற்றும் தொழிலாளர்களின் குறைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டு அறிந்தார்.  ரயில் பயணிகளுக்கு தேவையான ரயில் நிலையத்தில் வசதிகள் குறித்தும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்கு அறிவுரைகளையும் வழங்கினார். ரயில் தண்டவாளங்களில் கற்கள் வைப்பவர்கள் மீது புகார் வந்தவுடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸ்வா, ரயில் பாதுகாப்பு குறித்து ஊழியர்கள் அதிகாரிகளிடம் விளக்கப்பட்டது. எங்கெங்கு ரயில் விபத்துக்கள் நடைபெற்றதோ அதனுடைய படங்களை எல்லாம் காண்பித்து, எதனால் ஏற்பட்டது, தவறுகள் எங்கு நடந்துள்ளன, ரயில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது கூறப்பட்டது. பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருவாரா என்று இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

வீடியோஸ்

சிவகங்கை
Nov 21, 2024, 17:11 IST/மானமதுரை
மானமதுரை

சிவகங்கை: ஸ்டேஷன் மாஸ்டர்களுடன் பாதுகாப்பு உரையாடல்

Nov 21, 2024, 17:11 IST