கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மானாமதுரை , சிவகங்கை, திருப்புவனம், மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு பின் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், திடீரென கனமழை வெளுத்து வாங்கியது
சிவகங்கையில் 6. 60மில்லி மீட்டரும் மானாமதுரையில் 15. 10 மில்லி மீட்டரும் இளையான்குடியில் 27. 00மில்லி மீட்டரும், திருப்புவனத்தில் 8. 80 மில்லி மீட்டரும் திருப்பத்தூரில் 6. 00 மில்லி மீட்டரும் காரைக்குடியில் 11. 00மில்லி மீட்டரும் தேவகோட்டை 9. 00 மில்லி மீட்டரும் காளையார்கோவில் 29. 00, மில்லி மீட்டரும் சிங்கம்புணரி 3. 40 மில்லி மீட்டருர் மழையும், மாவட்டத்தில் மொத்தமாக 115. 90 மில்லி மீட்டரும் சராசரியாக 12. 88 மில்லி மீட்டரும் மழை
பதிவாகியுள்ளது
என மாவட்ட நிர்வாகம் தரப்பில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,