டி. புதுக்கோட்டை பகுதியில் ஆதார் சேவை துவக்கம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யூனியனுக்கு உட்பட்ட டி. புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அஞ்சலகத்தில் ஆதார் சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு தென்மண்டலஅஞ்சல் துறை தலைவர் ஜெய்சங்கர்தலைமை வகித்து துவக்கி வைத்தார். ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.