சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யூனியனுக்குட்பட்ட தெ. புதுக்கோட்டை மறவர் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாச்சாண்டி அம்மன்கோவிலில்
விவசாயம் செழிக்க வேண்டியும் மழை பெய்ய வேண்டியும் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது
இந்த கோவில் முளைப்பாரி திருவிழா கடந்த 1ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
இதையொட்டி கிராமமக்கள் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வந்தனர். மேலும் தினமும் இரவு வழிபாடு நடந்தது. முளைப்பாரிகளை எடுத்து ஊர்வலமாக சென்று முளைகொட்டு தின்னையில் வைத்த
பின்னர் இன்று மீண்டும் முளைகொட்டு திண்ணையிலிருந்து முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஸ்ரீ நாச்சாண்டி அம்மன் கோவில் வைத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முளைப்பாரிகளை சுற்றி பெண்கள் கும்மி கொட்டினர் பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று ஊரணியில் இன்று மாலை சுமார் 6 மணியளவில் கரைத்தனர்