சிவகங்கை: 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்விழா

60பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் 2000 மரக்கன்றுகளை கல்லடிதிடல், ஆக்கவயல், அரண்மணைகரை மற்றும் வல்லக்குளம் ஆகிய ஊராட்சிகளில் குறுங்காடுகள் அமைக்க திட்டமிட்டு
இன்று மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது.

பிரதான் தொண்டு நிறுவனம் நிதி உதவியுடன் 10 வகையான மரம்கன்றுகளை நடவு செய்யும் விழா இளையான்குடி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி கோமளா தலைமையில் நடைபெற்றது. குறுங்காடுகளின் பயன்கள் மற்றும் பராமரிப்பு முறைகள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், புவி வெப்பமயமாதல் குறித்தும், கார்பன் வெளியேற்றத்தைக் தடுக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து அதிக மரங்கள் வளர்க்க வேண்டும் என்பதை பலரும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பிரதான் தொண்டு நிறுவனம் சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி மற்றும் காளையார் கோவில் ஒன்றியங்களில் கண்மாய் மேம்பாட்டு பணிகளை மக்கள் பங்களிப்புடன் செயல் படுத்தி வருகின்றது. மேலும் இந்த மரக்கன்றுகள் அனைத்தும் 100 நாள் வேலை திட்டத்துடன் இணைந்து தொடர் பராமரிப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி