தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவர் கைது

52பார்த்தது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கலையரசு. இவர் மணிமந்திரா விநாயகர் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சேர்மன் பழனிச்சாமி தெருவை சேர்ந்த இருளப்பபிள்ளை மகன் பாண்டி என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 643 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய் 670-ஐ பறிமுதல் செய்துஇன்று இரவு சுமார் ஒன்பது மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி