சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கண்மாய் கரை அருகே திமுக அரசின் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து இளையான்குடி பேரூர் கழக அதிமுக சார்பில் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இளையான்குடி பேரூர் கழகச் செயலாளர் நாகூர் மீரா தலைமையிலும், தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பாரதிராஜன், கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஜெகதீஸ்வரன், இளையான்குடி ஒன்றிய குழு தலைவர் முனியாண்டி முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், முக்கிய நிர்வாகிகளான மலைச்சாமி, செல்வராஜ், ரவிச்சந்திரன், சுகுமாரன், பாலமுருகன், அபூபக்கர், சையது இப்ராகிம், மௌலானா சையது, மீரா ஹுசைன், திருநாவுக்கரசு, தாஜ்மைதீன், மீராங்கனி, முபாரக், அப்பாஸ் அலி, சிவக்குமார், ஆயூப்கான், ஜவகர், கேசவன், குருசேகரன், தெய்வேந்திரன், கலில் அகமது, முருகன், செல்வக்குமார், அப்துல்கலாம் ஆசாத், சையது அன்சாரி, பைசில் ரகுமான், மீரா, முகமது கனிபா, அமானுல்லா, அபுதாஹிர், முகமது அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.