கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியான முதியவர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை: திருச்சி மாவட்டம் வைரம்பட்டியை சேர்ந்தவர் செல்லையா(57). இவர் நேற்று பைக்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக விராலிமலை லஞ்சமேடு அருகே உள்ள பெட்ரோல் பங்க்குக்கு வந்தார். பெட்ரோல் நிரப்பிவிட்டு மணப்பாறை கோவில்பட்டி சாலையை கடந்தபோது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்லையா அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.