புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வீரபெருமாள்பட்டியில் இன்று அனுமதியின்றி மது விற்கப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அப்பகுதியில் உள்ள குளக்கரையை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மது பாட்டில்களை விற்ற கருங்காகுறிச்சியை சேர்ந்த அழகுராஜ் (31) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.