

விராலிமலை: வாகனம் மோதி முதியவர் பலி
விராலிமலை ஒன்றியம் கத்தலுார்ஊராட்சி அக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணபதி (55). நேற்று முன்தினம் இரவு திருச்சிமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அதே இடத்தில் கணபதி உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.