கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி.முகாமிற்கு சென்ற பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், பயிற்சியாளர் உட்பட இதுவரை 20 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணையில் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்த வழக்கில், மறைந்த நாதக நிர்வாகி சிவராமனின் கூட்டாளியான காவேரிப்பட்டினத்தை சேர்ந்த ரவி (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.